பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ரூ.20,000 வரை உதவித்தொகை! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

0
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - ரூ.20,000 வரை உதவித்தொகை! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!!

12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி பயில மத்திய அரசு வழங்கும் உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்த முழு விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை :

12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில்  மத்திய அரசு, ரூ.10,000 முதல் 20, 000 வரை உதவித்தொகை வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சி.பி.எஸ்.இ போல் தமிழகபள்ளி பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் - அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

மத்திய அரசின் 2022-23 ம் ஆண்டிற்கான இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான தேதி அக்.31 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற பொதுத் தேர்வில் 80%-க்கும் அதிகமான மதிப்பெண் பெற வேண்டும். ஆனால், இந்த மதிப்பெண் ஒவ்வொரு பிரிவினருக்கு ஏற்ப மாறும். மாணவர்கள் உயர்கல்விக்காக ஏதேனும் பட்டப் படிப்பில் சேர வேண்டும்.

இந்த உதவித்தொகை பெற அவர்கள் குடும்ப வருமானம் 4.5 லட்சத்திற்கு உள்ளாக இருக்க வேண்டும். மாநில அரசின் வேறு எந்த உதவி தொகை பெறக்கூடாது. இந்த உதவித்தொகை பெற வருடம் தோறும் புதுப்பிக்க வேண்டும். கல்லூரியில் தொடர்ந்து 50% தேர்ச்சி மதிப்பெண்களும், 75% வருகை பதிவேடும் கட்டாயம். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது?

  1. முதலில் https://scholarships.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, Applicant corner என கிளிக் செய்து New Registration செய்து உள்ளே செல்லவும்.
  2. அங்குள்ள இரண்டு பகுதியில்  NSP என்பதை தேர்வு செய்து, அதில் உள்ள Terms and Conditions படித்து டிக் செய்யவும் .
  3.  பின்னர் Register பகுதிக்கு சென்று, அங்குள்ள தகவல்களை நிரப்பி Captcha Code கொடுத்து Register செய்யவும்.
  4. அடுத்துள்ள Declaration பக்கத்தில் அதனைப் படித்து டிக் செய்துவிட்டு Registration கொடுக்கவும். பின், மொபைலுக்கு வரும்  Login ID, Password குறித்து வைக்கவும்.
  5. பின்னர் Continue பகுதியை கிளிக் செய்து அதில் உள்ள login-ல் உங்கள் Application number மற்றும் Password கொடுத்து உள்ளே செல்லவும். உங்கள் எண்ணுக்கு வரும் ஓடிபியை நிரப்பி, Password-ஐ மாற்றிக் கொள்ளவும்.
  6. பின் உங்களுக்கு ஒபனாகும் Dashboard-ல் Application form என கிளிக் செய்து, அதில் உங்கள் கல்வித் தகுதியை நிரப்பி Save & Next  கொடுக்கவும்.
  7. இறுதியாக உங்களுக்கு ஏற்ற உதவித்தொகையை கிளிக் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் அப்லோட் செய்யவும். (இதற்காக நீங்கள் மதிப்பெண் சான்றிதழ், ஆதார் கார்டு, Bonafide சான்று, வகுப்பு சான்று, வருமான சான்று, பாஸ்போர்ட் போட்டோ வைத்திருக்க வேண்டும்)
  8. கடைசியாக, Final Submit கொடுக்கவும். பின் உங்கள் அப்ளிகேஷனை பிரிண்ட் செய்து கொள்ளவும்.

இதனை வெற்றிகரமாக முடித்தால் மத்திய அரசின் இந்த உதவித்தொகை உங்களுக்கும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here