இந்த ஆண்டு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்!!

0

இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அமைச்சர் திட்டவட்டம் :

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலுக்கு பிறகு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர், பள்ளி மாணவருக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் பிரச்சினைகள் குறித்த போக்சோ சட்ட விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், தரமற்ற பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கும், மாணவர்களுக்கு இறுதி பொதுத்தேர்வு நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் எனவும், இதற்கான திருப்புதல் தேர்வு ஜனவரி 3வது வாரத்தில் நடைபெறும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here