
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகையை அதிகப்படுத்த, காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இத்திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் தற்போது விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை முன்னுதாரணமாக கொண்டு தெலுங்கானாவில் “முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” வருகிற அக்டோபர் 24ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசாணையை அம்மாநில அரசு வெளியிடப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இத்திட்டத்தின் மூலம் 1 முதல் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் இத்திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய அண்மையில் தெலுங்கானா மாநில அதிகாரிகள் வந்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.