பள்ளி மாணவர்களுக்கு பரவும் புதுவகை வைரஸ்.., இதுக்கு இதான் ட்ரீட்மென்ட்!!! சுகாதாரத்துறை பளீச்!!!

0
பள்ளி மாணவர்களுக்கு பரவும் புதுவகை வைரஸ்.., இதுக்கு இதான் ட்ரீட்மென்ட்!!! சுகாதாரத்துறை பளீச்!!!
பள்ளி மாணவர்களுக்கு பரவும் புதுவகை வைரஸ்.., இதுக்கு இதான் ட்ரீட்மென்ட்!!! சுகாதாரத்துறை பளீச்!!!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா ஒமிக்ரான் வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் சமீபகாலமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் வாந்தி மற்றும் வயிற்று போக்கால் பாதிப்படைந்து வருகின்றனர். இந்த மாணவர்களை பரிசோதனைக்கு உட்படுத்திய போது நோரோ வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கேரளாவில் எர்ணாகுளம் பள்ளிகளை தொடர்ந்து தற்போது வயநாட்டில் உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் வழியாக பரவக்கூடியது என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இரைப்பை அலர்ஜியை ஏற்படுத்தும் இந்த வைரஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகளை 2 நாட்களுக்குள் வெளிப்படுத்தும்.

“தளபதி 68″யை ஆர் ஜே பாலாஜி எடுக்கிறாரா? இதுகுறித்து அவரே கொடுத்த விளக்கம்!!

இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனை படி வீட்டில் ஓய்வு பெற்று 1 முதல் 3 நாட்களுக்குள் குணமாகிவிடுவார்கள். மேலும் குணமாகி இரண்டு நாட்கள் கழித்தே வெளியே வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here