தமிழகத்தில் பள்ளியில் மாணவி திடீர் மரணம் – பெற்றோர்கள் மறியல் போராட்டம்!!

0
மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்? தொடர்ந்து வலுக்கும் கோரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீ மதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவி மரணம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி 12-ஆம் வகுப்பு விடுதியில் தங்கி பயின்று வந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து சம்பவம் இடத்திற்கு சென்று பள்ளி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீஸ்கார் விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் பள்ளி மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வெவ்வேறு தனியார் பள்ளிகளில் 5 மாணவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இன்னொரு பள்ளி மனைவி இறந்தது மக்களிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மரணத்திற்கு காரணமான பள்ளியை சீல் வைக்க வேண்டும் மற்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மாணவியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.இதற்கு பதில் அளிக்கும் விதமாக காவல்துறை மரணத்திற்கு தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here