பள்ளிகள் ஜூன் 12ம் தேதி தான் திறக்கப்படும்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
பள்ளிகள் ஜூன் 12ம் தேதி தான் திறக்கப்படும்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
பள்ளிகள் ஜூன் 12ம் தேதி தான் திறக்கப்படும்..., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கோடை வெயிலின் தாக்கமானது சராசரியை விட அதிகரித்து வந்தது. இதனால், பள்ளிகளில் 2022-2023 ஆண்டுக்கான இறுதி வகுப்பு தேர்வுகள் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி முதலே மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, தெலுங்கானா மாநிலமானது பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி தான் புதிய ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என அறிவித்திருந்தது. தற்போது, இந்த கோடை விடுமுறை நாட்கள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதால், பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.

SI தேர்வில் நடந்த முறைகேடு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., விசாரணையை தீவிரப்படுத்த முடிவு!!!

அதாவது, ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதிக்குள் புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை தொடக்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், வீடு வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளையும் கண்டறிந்து, அவர்களின் வயதிற்கேற்ப வகுப்புகளில் சேர்க்க வேண்டும் எனவும் பள்ளி கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here