பள்ளிகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

0
பள்ளிகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!
பள்ளிகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!

இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு மாநிலத்திலும் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைத்து வருகின்றனர். அதாவது, தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், ஜூன் 5ம் தேதி 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் புதிய ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்படும் என முன்பு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், அதிகரித்து வரும் கோடை வெயிலால் ஜூன் 7ம் தேதி அனைத்து வகுப்புகளுக்கும் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என சமீபத்தில் அன்பில் மகேஷ் மாற்றி அறிவித்தார். இதே போல தான், புதுச்சேரி அரசும் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நீட்டித்து ஜூன் 7ம் தேதி புதிய வகுப்புகள் தொடங்கும் என அறிவித்தது.

இந்த காலத்துல இது வெட்கக்கேடு…, ஒடிசா ரயில் விபத்து குறித்து காட்டம் தெரிவித்த பிரமுகர்கள்!!

தற்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் நாட்களில் கோடை வெயிலானது 100 டிகிரிக்கு மேல் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன், இந்த அதிகபட்ச வெயிலின் தாக்கமானது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மிகுந்த சிரமத்தை மற்றும் உடல் பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். இதன் காரணமாக, மேலும் ஒரு வாரம் பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here