நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – இன்று தமிழக முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!!

0

தமிழ் நாட்டில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தொற்று மாநிலத்தில் குறைந்து வருவதால் நாளை மறுநாள்(செப்டம்பர் 1,2021) முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கல்லூரிக்கு வரவேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மாணவர்களும் அதற்கேற்ப தயாராகி வருகின்றனர்.

இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். மேலும் கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here