Tuesday, April 23, 2024

செப்டம்பர் 5 முதல் பள்ளிகள் திறப்பு – ஆந்திர அரசு திட்டம்!!

Must Read

கல்வி அமைச்சர் ஆதிமுலாபு சுரேஷ் , செப்டம்பர் 5 ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஆனால் அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார். .

மீண்டும் பள்ளிகள் ஆரம்பம்:

செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது, இருப்பினும், தேதி நெருங்கும் போது நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு – எதற்கு தெரியுமா??

Education MInister of Andhra Pradesh Adimulapu Suresh
Education MInister of Andhra Pradesh Adimulapu Suresh

முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி எடுத்த கல்வி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு கல்வி அமைச்சர் ஆதிமுலாபு சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 5 ஆம் தேதி தேதியை அரசாங்கம் நிர்ணயித்துள்ள நிலையில், அப்போதைய சூழ்நிலையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு ரேஷன் பொருட்கள்:

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் வரை, பகல் உணவுக்கு பதிலாக, ரேஷன் பொருட்கள் மாணவர்களுக்கு அவர்களின் வீடுகளில் வழங்கப்படும் என்று கூறினார். கல்வியாண்டிலிருந்து அரசுப் பள்ளிகளில் முன் தொடக்கக் கல்வி (எல்.கே.ஜி மற்றும் யுகேஜி) அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஜூனியர் அரசு கல்லூரிகளில் உள்ள ஏபி ஈம்செட், ஜேஇஇ, ஐஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

schools reopening with new feautures
schools reopening with new feautures

ஆந்திராவில் வழங்கப்படும் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக மாவட்ட அளவில் இணை இயக்குநர் பதவியும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், “அரசுப் பள்ளிகளில் ஆங்கில மீடியத்தை முறையாகச் செயல்படுத்த இரண்டு மாநில அளவிலான இயக்குநர் பதவிகளை உருவாக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்றும் நிருபர்களிடம் சுரேஷ் கூறினார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -