
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் அதிக அளவில் காற்று மாசுபாடு அடைந்து வருகிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நவம்பர் 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்திலும் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டு வருவதால், அம்மாநில அரசும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதாவது, வாகனங்களில் இருந்து வெளியேறும் குறைந்த தர டீசல், புகை மூட்டத்திற்கு முக்கிய பங்களிக்கின்றது. இதனால் புகைமூட்டத்தை குறைக்கும் முயற்சியை தொடர, வரும் நவம்பர் 10ம் தேதி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை மூட உள்ளதாக பஞ்சாப் மாநிலத்தின் இடைக்கால முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள், முதியவர்கள் முகமூடி அணிந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்தி உள்ளார். நவம்பர் 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விடுமுறை என்பதால், அதன் தொடர்ச்சியாக நவம்பர் 11 மற்றும் 12 வார விடுமுறையும் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.