தொடர்ந்து மாறி வரும் பருவமழை காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மழையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்களில், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஒரு வார காலமாக பகலில் 28.8 டிகிரி வெப்ப நிலையும், இரவு நேரங்களில் மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கிடையில் இந்த தொடர் மழையானது இன்று தீவிர கன மழையாக மாறி உள்ளது. இதையடுத்து, இந்தூரில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இன்று (செப்டம்பர் 16) 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் டாக்டர் இளையராஜா தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த பள்ளி திறப்பை அறிய, தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பள்ளியை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைசி ஓவரில் தலைகீழாக மாறி ஆட்டம்…, இந்தியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்களாதேஷ்!!