தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில், மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

கலை, பண்பாட்டு செயல்பாடுகள்:

தமிழக பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள், கடந்த ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. மேலும் தமிழக பள்ளிக் கல்வியில்,2022-23 கல்வியாண்டுக்கான நாட்காட்டியின் அடிப்படையில், கடந்த மாதம் முதல் பருவத் தேர்வு மாணவர்களுக்கு நடைபெற்றது, இதையடுத்து இந்த மாதம் இறுதி வரை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அரசு பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான, பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்களுக்கு வாரத்தில் 2 பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தொடங்கிய பொருளாதார மந்த நிலை.,ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிவு!!

இதன் அடிப்படையில் நாடகம், இசை, நடனம், காட்சிக்கலை, நாட்டுப்புற கலை ஆகியவற்றில் மாணவர்கள் ஒரு செயல்பாட்டை தேர்வு செய்து, செயல்பாடுகளில் ஈடுபடலாம். மேலும் பண்பாட்டு செயல்பாடுகளை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க கலைஞர்கள் நியமிக்க பட உள்ளதாகவும், பள்ளிகளில் பொறுப்பாசிரியர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here