தமிழகத்தில் 49 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு…, பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

0
தமிழகத்தில் 49 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு..., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் 49 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு..., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கி இரண்டு மாதங்கள் ஆன நிலையில் கல்வித் துறை சார்பான காலிப்பணியிடங்கள் பல நிரப்பப்படாமல் உள்ளது. இந்த காலி பணியிடங்களில், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவைகள் அடங்குவதுடன், பதவி உயர்வும் சரிவர வழங்கப்படாமலே உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்நிலையில், பள்ளி கல்வி துறை 49 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டில் பதவி மூப்பை அடிப்படையாக கொண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள 49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த பதவி உயர்வால், பள்ளிகளில் காலியான தலைமை ஆசிரியர் இடத்தை குறிப்பிட்ட பள்ளியின் மூத்த ஆசிரியை பொறுப்பெற்று பார்க்க வேண்டும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

விவசாயிகளே., இன்று (ஆகஸ்ட் 4) முதல் இழப்பீடு தொகை பெறலாம்., NLC நிறுவனம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here