கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 100 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நிபா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அந்த வகையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 7 பஞ்சாயத்துகளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இம்மாவட்ட பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது குறித்தும் விவாதித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சிக்கிம் முதல்வர்!!