தமிழகத்தில் மகளிரை தொடர்ந்து இவங்களுக்கும் பேருந்துகளில் சிறப்பு சலுகை…, வெளியான அதிரடி அறிவிப்பு!!

0
தமிழகத்தில் மகளிரை தொடர்ந்து இவங்களுக்கும் பேருந்துகளில் சிறப்பு சலுகை..., வெளியான அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் மகளிரை தொடர்ந்து இவங்களுக்கும் பேருந்துகளில் சிறப்பு சலுகை..., வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழக அரசானது, பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை போக்குவரத்து துறை மூலமாக சிறப்பாக வழங்கி வருகிறது. அதாவது, அரசு பேருந்துகளில் மகளிர் இலவச பயணம், 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம், மக்களின் தேவையை அறிந்து குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு பேருந்து வசதிகள் உள்ளிட்ட பல சலுகைகளை அரசுடன் இணைந்து போக்குவரத்து துறை வழங்கி வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அரசு பேருந்துகளை போல, தனியார் பேருந்துகளும் மக்களின் தேவை அறிந்து பல்வேறு சலுகைகளை வழங்கி அரசுக்கே முன்னுதாரமான திகழ்கிறது. அதாவது, பேருந்துகளில் டிக்கெட் எடுக்க சில்லறை தேவை என்ற சிரமத்தை தீர்ப்பதற்காக, கோவையில் உள்ள சில தனியார் பேருந்துகள் டிக்கெட் எடுப்பதை UPI எனப்படும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி அமைத்துள்ளது. இத்தகைய வசதியை அரசு பேருந்துகளில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PM கிசான் விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்., உடனே இப்படி விண்ணப்பிங்க!!!

இதன் தொடர்ச்சியாக, தமிழக பள்ளிகள் விரைவில் திறக்க உள்ளதால் மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் இலவசமாக அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை போல, கோவையில் உள்ள சில குறிப்பிட்ட தனியார் பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் 5 ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்தி எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை, பள்ளி மாணவர்கள் பெற சீருடை அணிந்திருந்தால் மட்டும் போதுமானது எனவும் குறிப்பிட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here