வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்.., மாதம் தோறும் உதவித்தொகை பெறலாம்.., அரசு அதிரடி அறிவிப்பு!!!

0
வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்.., மாதம் தோறும் உதவித்தொகை பெறலாம்.., அரசு அதிரடி அறிவிப்பு!!!
வேலையில்லா இளைஞர்களுக்கு குட் நியூஸ்.., மாதம் தோறும் உதவித்தொகை பெறலாம்.., அரசு அதிரடி அறிவிப்பு!!!

பொருளாதார மந்த நிலையால் பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க சிறப்பு முகாம், தொழில் உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலையில்லாமல் உள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர் 40 வயது பூர்த்தி அடையாதவராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5 ஆண்டு வயது தளர்வு உண்டு எனவும் அறிவித்துள்ளனர். மேலும் குடும்ப வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பின் அடையாள அட்டை, கல்வி சான்றிதழ் உடன் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் 31.03.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? அரசின் சூப்பர் அறிவிப்பு! 16,932 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!!

இவ்வாறு தகுதியுடைய 9ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரி வரை ரூ.200, ரூ.300, ரூ.400, ரூ.600 என மாதந்தோறும் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே இந்த திட்டத்தில் உள்ளவர்கள் புதுப்பிக்க வங்கி கணக்கு புத்தக நகலையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here