இவர்களுக்கான கல்வி உதவித்தொகை.., ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

0
இவர்களுக்கான கல்வி உதவித்தொகை.., ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
இவர்களுக்கான கல்வி உதவித்தொகை.., ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம்.., அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகளின் வாரிசுகளுக்கு கருணை – கல்வி உதவி தொகை ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்டு வரும் நிலையில், 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கு வருகிற ஜூன் 5-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இது தொடர்பாக புதுவை முப்படை வீரர் நலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2022 – 23 ஆம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகையை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையரின் வாரிசுகள் பெறுவதற்குரிய விண்ணப்பமானது வருகிற ஜூன் 5 முதல் 28-ஆம் தேதி வரை முப்படை நலத் துறை மூலம் வழங்கப்பட இருக்கிறது. எனவே தகுதியுள்ள நபர்கள் தங்களது அடையாள அட்டையுடன் முப்படை நலத் துறை அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். அல்லது முப்படை நலத் துறையின் வலைதளம் வாயிலாகவும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

மெட்ரோ ரயில் வழித்தடம் இந்த பகுதிகளில் இயங்காது?? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி காரைக்கால் பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா்கள் மற்றும் விதவைகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், மாஹே, ஏனாம் பகுதிகளைச் சோ்ந்த நபர்கள் அந்தந்த மண்டல நிா்வாக அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கி கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்தவர்கள் பள்ளிக் கட்டண அசல் ரசீதுகளுடன் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் முப்படை நலத்துறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here