ரேஷன் அட்டைதாரர்களே., தமிழக ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்., எப்படினு தெரியுமா?

0
ரேஷன் அட்டைதாரர்களே., தமிழக ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்., எப்படினு தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களே., தமிழக ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்., எப்படினு தெரியுமா?

நாடு முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் எடை குறித்த விவரங்கள் அவர்களது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனை வளர்ச்சி அடைந்து வருவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் UPI மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகமாக உள்ளது. நுகர்வோர்கள் வாங்கும் பொருளுக்கான பணத்தை Google Pay, Phonepe, Paytm உள்ளிட்ட UPI செயலிகள் மூலம் செலுத்தலாம். இதன் மூலம் நேரடியாக கூட்டுறவுத்துறை கணக்கில் வரவு வைக்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…, “அமெரிக்கா செல்ல தயாராகுங்கள்” அன்பில் மகேஷ் கொடுத்த சர்ப்ரைஸ்!!

இத்திட்டம் மத்திய மாநில கூட்டுறவு துறை வங்கிகளுக்கு இன்னும் ஒரு வாரத்தில் அமல்படுத்தப்படும். இந்த மே மாத இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப வசதிகளை மேம்படுத்தி வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here