உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு – காவலரே டிஜிபி இடம் புகார் அளித்ததால் புது சர்ச்சை..!

  0
  89

  தமிழ்நாட்டில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக காவலர் ஒருவரே புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  கூகுளை பயன்படுத்தி தேர்வெழுதினர்..!

  உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் காவலர்களும் பங்கேற்றனர். இதில் ஒரே தேர்வு மையத்தில் பல காவலர்கள் தேர்வு எழுதுவதற்காக ஒரே நேரத்தில் விண்ணப்பித்தனர். மேலும், தேர்வு கண்காணிப்பாளர்கள் உதவியுடன், அருகருகே உட்கார்ந்து தேர்வு எழுதுவது போல், காவலர்கள் இருக்கைகளை அமைத்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

  உதவி ஆய்வாளர் தேர்வின் போது சில நேரம் மட்டும் சிசிடிவி காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, மீதி நேரம் காவலர்கள் ஒன்றாக உட்கார்ந்து தேர்வெழுதியதாகவும் மொபைல் போனில் கூகுளை பயன்படுத்தி எழுதியதாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  டிஜிபி இடம் புகார்..!

  தென்காசியை சேர்ந்த ஐஏஎஸ் அகாடமி, இரண்டு பயிற்சி மையங்களும் இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த முறைகேட்டை ஒரு காவலரே டிஜிபி இடம் புகாராக அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  To Subscribe Youtube Channel Click Here
  To Join WhatsApp Group Click Here
  To Join Telegram ChannelClick Here

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here