கலர்ஸ் டிவியில் பிக் பாஸ் பிரபலம் – யார் தெரியுமா?? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தா தற்போது பிரபல சேனலில் சீரியல் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சம்யுக்தா

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியின் ஒரு தூண் என்றே சொல்லலாம். அதிகளவு டிஆர்பியை தூக்கி விட்டதே பிக் பாஸ் நிகழ்ச்சி. 100 நாட்கள் ஒரே வீட்டில் 15 பேரால் எப்படி இருக்க முடிகிறது என்பது தான் கான்செப்ட். அதில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் மக்களை சுவாரசியமாக பார்க்க வைத்தது. பலர் எகிறி குதித்து வெளியேறியுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 இல் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எந்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் நடக்காத விதமாக அனைத்து பண்டிகைகளும் அந்த வீட்டிலேயே கொண்டாடினர். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்டதாகவே இருந்தது.

ஹேமா, லக்ஷ்மியை ஒன்றாக வீட்டிற்கு அழைத்து வரும் பாரதி – அதிர்ச்சியில் கண்ணம்மா!!

ஆரி தான் தனது பொறுமையால் மக்கள் மனதை கொள்ளைகொண்டார். சம்யுக்தா மற்றும் ஆரி இடையே தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. ஆனாலும் சம்யுக்தாவை பலருக்கும் பிடித்திருந்தது. அவரை பார்க்கும்போது ஒரு அம்மா ஃபீல் வருவதாக போட்டியாளர்களின் பலர் கூறியிருந்தனர். இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பலரும் பல படங்களில் கமிட்டாகியுள்ளனர். அந்த வகையில் சம்யுக்தா பிரபல சீரியல் ஒன்றி நடிக்கவுள்ளார். அதாவது கலர்ஸ் சேனலில் ‘அம்மன்’ என்ற சீரியல் வெளியாகவுள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் பிக் பாஸ் சம்யுக்தா. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here