நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது SBI முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். SBI PO ஆனது மொத்தம் 2,000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த தேர்வுக்கு செப்டம்பர் 7 முதல் 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- SBI ஆனது PO பணியிடங்களுக்கு என மொத்தம் 2000 காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது.
- அதன்படி இந்த பணிக்கு 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
- அதன் படி முதல் கட்ட தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று தற்காலிக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் SC/ST/PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும், பொது பிரிவினர் ரூ.750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்