ஈசியா பெறலாம் 5 லட்சம் வரை பெர்சனல் லோன்.. Use பண்ணிக்கோங்க மக்களே!!!

0

கொரோனா தொற்றால் இந்திய மக்கள் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். எனவே நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) மக்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் ‘எஸ்பிஐ கவச்’ தனிநபர் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்காக உருவாக்கப்பட்ட தனிநபர் கடன் திட்டம் தான் இந்த எஸ்பிஐ கவச். இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறுவதற்கு பிணை ஏதும் தேவையில்லை. இத்திட்டம் மூலம் ரூ.25000 முதல் ரூ. 5 லட்சம் ரூபாய் வரை எஸ்பிஐ வங்கி கடன் தருகிறது. அதுவும் 8.5% வட்டி விகிதத்துக்கு கடன் கிடைக்கிறது. கடனை திருப்பிச் செலுத்த 60 மாதங்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின் கொரோனா பாதிப்பு எதிர்கொண்டவர்களுக்கு இந்தக் கடன் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் மாத சம்பளக்காரர்களுக்கும், பென்ஷன் பெறும் நபருடன் இணைந்து சம்பளக்காரர்கள் அல்லாதவர்களுக்கும் இத்திட்டம் மூலம் கடன் அளிக்கப்படும். SBI வாடிக்கையாளர்கள் தங்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ கொரோனா சிகிச்சைக்கு பணத்தை பெற Kavach personal loan திட்டத்தின் கீழ் கடனை பெற்றுகொள்ளலாம்.

கொரோனா தொற்றால் வேலையிழந்து, மருத்துவ செலவுகளுக்கு பணம் இன்றி தவிக்கும் மக்களுக்கு இத்திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. SBI வங்கியில் ஏறத்தாழ 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே பெரும்பாலானோர் இந்த திட்டத்தால் பயன்பெறுவர் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here