வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – எஸ்பிஐ அறிவிப்பு

0
வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - எஸ்பிஐ அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது வீட்டுக்கடன் பிரிவில் வாடிக்கையாளர்களை அதிகப்படியாக ஈர்ப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பான சூழ்நிலையை உறுதி செய்வதற்காகவும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது கூடிய விரைவில் அணைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெலிவரி டைம் பிரச்சனை

டெலிவரி டைம் என்பது குறித்த நாளுக்குள் பில்டர்கள் கூறிய படி வீட்டின் கட்டுமான பணிகளை முடித்து வாடிக்கையாளர்கள் கையில் சாவியைக் கொடுக்க வேண்டும். ஆனால் பில்டர்கள் குறித்த நேரத்திற்குள் பணியை முடிக்காமல் தாமதிப்பது தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் இது பெரும் சுமையாக பார்க்கப்படுகிறது.

அசல் தொகை திருப்பி கொடுக்கப்படும்

இத்தகைய டெலிவரி டைம் பிரச்சனையால் நாடு முழுவதும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதனை சரிசெய்ய SBI புது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி பில்டர்கள் தாங்கள் கூறியபடி வேலையை செய்து முடிக்காமல் விட்டால் வாடிக்கையாளர்களுக்கு முழு அசல் தொகையும் திருப்பி அளிக்கப்படும் (வட்டி திருப்பி அளிக்கப்பட மாட்டாது) என்று SBI அறிவித்துள்ளது. இது வீட்டுக்கடன் பெற்றவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விதிமுறைகள்

இத்திட்டமானது முதலில் அபார்ட்மெண்ட்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் எஸ்பிஐ வங்கி அந்தத் திட்டத்திற்கு sole lender ஆக இருந்தால் மட்டுமே இந்தத் திட்டம் செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது.

இது வீட்டுக்கடன் பெற்றவர்கள் மத்தியில் நம்பிக்கையும், பில்டர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here