2,000 பேருக்கு புதிதாக பணி – பாரத ஸ்டேட் பேங்க் (SBI) முடிவு..!

0

இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி (SBI) கிராமப்புற கடன் திட்டங்கள் மற்றும் கடன் அட்டை பணிகள் உள்ளிட்டவைகளுக்காக புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்டேட் வங்கி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் வங்கிகள் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் SBI வங்கி புதிதாக 2000 பேரை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதங்களில் இளநிலை மற்றும் நடுத்தர மட்டத்தில் இந்த பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது. வேளாண் கடன்கள் மற்றும் கிராமப்புற வங்கி செயல்பாடுகள் ஆகியவற்றில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு இதை முன்னுரிமை அளிக்கப்படும் என வங்கி வட்டாரங்கள் கூறுகின்றன.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

SBI
SBI

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு..!

SBI புதிதாக பணியமர்த்த உள்ள 2000 பேரில் கிரடிட் கார்டுகள் சந்தைப்படுத்துதலில் சிறிய நகரங்களை உட்படுத்துவதற்கான பணிகளிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியாளர் நியமனத்தில் சேவைகளில் உள்ள அனுபவத்தின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் இளநிலை பணியாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here