உருவாகிறது தாதா சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படம் – யாரு ஹீரோன்னு தெரியுமா??

0

இந்திய கிரிக்கெட் வீரர்களில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ள சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

தாதா பயோகிராபி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் சவுரவ் கங்குலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இவர்க்கு என்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதே உண்மை.  ரசிகர்களால் “தாதா” என்று செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப் படமாக உருவாக உள்ளது.

இந்த படத்தில் கங்குலியின் இளமை வாழ்க்கை முதல் இந்திய கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவை பொறுத்தவரை அவ்வப்போது விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுவது வழக்கம்.

மேலும், இதற்கு முன்  சச்சின், தோனி, மித்தாலி ராஜ், முகமது அசாருதீன் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களின் வரலாறு படமாக வெளி வந்துள்ள நிலையில் கங்குலியின் படம் வெளியாக உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த படத்தில் சவுரவ் கங்குலியாக ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை கங்குலி வெளியிட்டுள்ளார்.  அதாவது, என் வாழ்க்கையின் மிகப்பெரிய நம்பிக்கையே கிரிக்கெட் தான்.  இதுவே என் வாழ்வில் நான் தலை நிமிர்ந்து நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.  இது மட்டுமல்லாமல், தற்போது எனது வாழ்க்கை வரலாறும் படமாக வரவுள்ளது எனக்கு மகிழ்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here