அசத்தலான கோல் அடித்த ரொனால்டோ…, 2வது இடத்தை எட்டிய அல் நாஸ்ர் அணி!!

0

சவுதி அரேபியா ப்ரோ லீக் தொடரில், ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி, 2-1 என்ற கோல் கணக்கில் ABHA அணியை வீழ்த்தி 2 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

சவுதி அரேபியா ப்ரோ லீக்:

பிரபலமான கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையே, சவுதி அரேபியாவில் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ரொனால்டோவின் அல் நாஸ்ர் அணி, ABHA அணிக்கு எதிராக தனது 21 வது லீக் போட்டியில் விளையாடியது. இதில், ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ABHA அணி சார்பாக அப்துல்பத்தா ஆதம் 26 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து அணியை முன்னிலை பெற வழிவகுத்தார்.

இதே நிலையே முதல் பாதியில் தொடந்ததால், ABHA அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட 2வது பாதியில், அல் நாஸ்ர் அணியின் ரொனால்டோ வேகம் காட்ட 78 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதனை தொடர்ந்து, அல் நாஸ்ர் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

இதனை தாலிஸ்கா கோலாக மாற்றி அசத்தினார். இதனால், ஆட்ட நேர முடிவில் அல் நாஸ்ர் அணியானது 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம், சவுதி அரேபியா ப்ரோ லீக்கில் அல் நாஸ்ர் 21 போட்டிகளில், 15 ல் வெற்றி, 5 டிரா மற்றும் 2ல் தோல்வி அடைந்து 49 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here