ஆசிய சாம்பியன்ஷிப்பில் சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள்…, தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

0
ஆசிய சாம்பியன்ஷிப்பில் சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள்..., தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கி அசத்தல்!!
ஆசிய சாம்பியன்ஷிப்பில் சரித்திரம் படைத்த இந்திய வீரர்கள்..., தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கி அசத்தல்!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்:

உலக பேட்மிண்டன் டூரின் ஒரு பகுதியாக, ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரில், இந்தியா சார்பாக முன்னணி நட்சத்திர வீரர்கள், பி வி சிந்து, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி உள்ளிட்ட பலர், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதில், ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இந்த இறுதிப் போட்டியில், மலேசியாவின் ஓங் யூ சின் மற்றும் தியோ ஈ யி எதிர்த்து இந்திய ஜோடி போட்டியிட்டது. இதில், தனது முதல் செட்டை 16-21 என புள்ளி கணக்கில் இழந்து இந்திய ஜோடி ஏமாற்றியது.

வெளியான ஐபிஎல் புள்ளி பட்டியல்…, மீண்டும் முதலிடத்தை பிடித்த குஜராத்…, CSKயின் நிலை??

இதையடுத்து எழுச்சி கண்ட, சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, அடுத்த செட்டை 21-17 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது. இதன் விளைவால், வெற்றியாளரை தீர்மானிக்கும் 3 வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இந்த செட்டை, ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி, 2-1 என்ற வெற்றி வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தையும் தட்டி சென்றது. இதன் மூலம், ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற வரலாறையும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here