800 ஆண்டுகளுக்கு பிறகு, நெருங்கி வரும் இரு கோள்கள் – வானில் தோன்றும் அரிய ‘கிறிஸ்துமஸ் நட்சத்திரம்’!!

0

டிசம்பர் 21ம் தேதி 800 ஆண்டுகளுக்கு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்ற உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம் எனவும் சனி மற்றும் வியாழன் என இரு கோள்கள் மிக அருகில் வருவதால் இது தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 60 ஆண்டுகளுக்கு இவ்வாறு தோன்ற வாய்ப்பில்லையாம், எனவே எல்லாரும் மிஸ் பண்ணாம பாத்துருங்க…

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாசாவின் கூற்றுப்படி, வியாழன் மற்றும் சனி ஆகிய இரு கோள்களும் ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் மேலாக நெருங்கி வருகின்றன. ஆனால் அவை 2020 ஆம் ஆண்டில் இருக்கும் அளவுக்கு நெருக்கமாக வந்ததில்லை. மேலும் கடந்த சுமார் 400 ஆண்டுகளில் இவ்வளவு நெருக்கமாக இணையவில்லை என்பதால் இது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திடீரென உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறிய அனுபாமா – ரசிகர்கள் ஷாக்!!

இந்நிகழ்வின் நேரம் இன்னும் சரியாக கணிக்கப்படவில்லை. மேலும் 20ம் தேதி சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் தோன்றும் இந்த நட்சத்திரம் 22ம் தேதி வரை இருக்கும் என்பதால் நாளை (டிச.21) ஆண்டின் மிக நீண்ட இரவு ஆக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உலகின் எந்த பகுதியில் இருந்தும் இதனை வெறும் கண்ணால் பார்க்க முடியும் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here