சத்யராஜின் படத்திற்கு இடைக்கால தடை.. நீதிமன்றம் போட்ட உத்தரவு – என்ன காரணம்!!

0

நடிகர் சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படம் வெகு நாளாக வெளிவர காத்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தீர்ப்புகள் விற்கப்படும்:

நடிகர் சத்யராஜ் 80, 90ஸ்களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். மேலும் தற்போது தமிழ், மற்றும் பிற மொழிகளிலும் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் சத்யராஜ் நடிப்பில் உருவான தீர்ப்புகள் விற்கப்படும் என்ற படம் டிசம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் இவருடன் இணைத்து ஸ்மிருதி வெங்கட், ஹரீஷ் உத்தமன், ரேணுகா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தை இயக்குனர் தீரன் இயக்கி உள்ளார். ஹனி பீ கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.

மேலும் இவர்களுடன் இணைந்து இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும் தயாரித்து உள்ளது. தற்போது இந்த இரு நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்பினிட்டி பிரேம்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆலப்புழாவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, படத்தை திரையரங்கு, ஓடிடி ஆகிய எந்த வழியிலும் வெளியிடக்கூடாது என தடை வாங்கியுள்ளது. இவர்களின் இந்த பிரச்சனை முடிந்த பிறகு தான் தீர்ப்புகள் விற்கப்படும் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here