வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 2500 உதவித்தொகை., அரசின் ஜாக்பாட் திட்டம் வெளியீடு!!

0
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 2500 உதவித்தொகை., அரசின் ஜாக்பாட் திட்டம் வெளியீடு!!
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ. 2500 உதவித்தொகை., அரசின் ஜாக்பாட் திட்டம் வெளியீடு!!

மாநிலம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்பு:

மாநில முழுவதும் இளைஞர்களுக்கு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மாநில அரசின் சார்பாக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பெருக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால், இந்த வேலை வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் பொருளாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுவதால், அரசின் சார்பாக அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பட்ஜெட்டில், இந்த இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பை மாநில முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்துள்ளார்.

வாகன ஓட்டிகளுக்கு ஷாக்., 5 முதல் 10% வரை உயரும் சுங்க கட்டணம்! ஏப்ரல் 1 முதல் அமல்?

அதாவது மாநிலத்தில் உள்ள 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2500 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here