Saturday, April 20, 2024

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு – சிபிஐ தகவல்!!

Must Read

சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கோரி இருந்த ஜாமின் மனுவிற்கு சிபிஐ சார்பு வழக்கறிஞர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது இவர் தான் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளார் என்று அவருக்கு எதிராக வாதாடியுள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு:

சாத்தான்குளம் வியாபாரிகள் இருவர் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டதை அடுத்து காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு உள்ளது. தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீதர் தனக்கு ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்று மனு ஒன்றை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

shrithar
shrithar

அவர் கோரியிருந்த மனுவில் கூறப்பட்டதாவது “சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். தற்போது இந்த வழக்கினை சிபிஐ விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த வழக்கு தொடர்ப்பாக தடயவியல் அதிகாரிகள் தகவல்களை சேகரித்து அதனை சமர்ப்பித்து விட்டனர்.”

“இதனால் எனக்கு ஜாமின் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். நீதிமன்றம் விதிக்கும் எந்த கட்டுப்பாடுகளையும் பின்பற்ற மறக்கமாட்டேன். தலைமறைவாக எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன். எனக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.” என்று தெரிவித்திருந்தார்.

சிபிஐ சார்பு வழக்கறிஞர்:

ஆனால், இதற்கு எதிராக சிபிஐ சார்பு வழக்கறிஞர் வாதாடியுள்ளார். அவர் கூறியதாவது “இந்த வழக்கு குறித்து 45 பேரிடம் தற்போது வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதே போல் சம்பவம் நடந்த அன்று ஸ்ரீதர் தான் காவல்நிலைய பொறுப்பில் இருந்துள்ளார்.”

110 கோடி ரூபாய் வரை கிசான் திட்டத்தில் முறைகேடு – 80 பேர் பணிநீக்கம்!!

“ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய்யாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இது இவருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. அதே போல் தற்போது இவருக்கு ஜாமின் வழங்கினால் சாட்சியங்களை மாற்றுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.” என்று வாதாடினார். இதனை கேட்ட நீதிபதிகள் வழக்கினை வரும் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -