ஜனவரி 27 சிறையில் இருந்து விடுதலை ஆகும் சசிகலா – தமிழக அரசியலில் பரபரப்பு!!

0

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலா வரும் ஜனவரி 27, 2021 அன்று விடுதலை செய்யப்படலாம் என பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கு:

1991 – 1996 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என அதிரடியாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு ₹100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ₹10 கோடியும் அபராதமும், அனைவருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன் மூலமாக ஜெயலலிதா தனது முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என கூறிய நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டார். ஆனால் இதனை எதிர்த்து 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக அரசு மற்றும் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மறைந்து விட்ட காரணத்தால் மற்ற மூவர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சசிகலா விடுதலை:

சசிகலா சிறையில் இருந்து எப்போது விடுதலை ஆவார் என்பது குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவின. இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இது குறித்து மனு வழங்கி இருந்தார். அதில் விளக்கம் அளித்த பெங்களூரு சிறை நிர்வாகம் 4 வருட சிறைத்தண்டனை 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்று சசிகலா விடுதலை செய்யப்படலாம் என தெரிவித்து உள்ளது. மேலும் அபராதத் தொகையான ரூ.10 கோடி இன்னும் செலுத்தப்படாத காரணத்தால் 2022ம் ஆண்டு பிப்ரவரி 13ம் ஆண்டு வரை சிறையில் (மேலும் ஒரு வருடம்) அடைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

சசிகலா விடுதலை ஆனாலும் அதிமுக.,வில் அவருக்கு இடமில்லை என அமைச்சர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா விடுதலை செய்யப்பட்டால் தமிழக அரசியலில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அது எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. இதனால் தேர்தலில் அதிமுக vs திமுக vs சசிகலா என மும்முனை போட்டி நடைபெறாமல் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here