‘நான் அரசியலை விட்டு விலகுகிறேன்’ – சசிகலா அதிரடி அறிவிப்பு!!

0

அமமுக தலைவர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சசிகலா. இது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

அரசியலிலிருந்து விலகிய சசிகலா

டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அரசியலிலிருந்து விலகப்போவதாக சசிகலா நேற்று இரவு அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, பன்னீர் செல்வம் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பன்னீர் செல்வத்தை பதவியிலிருந்து விலகும்படி ஏற்பட்ட நிர்பந்தத்தினால் அவர் தர்மயுத்தத்தை தொடங்கினார். அதே வேளையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக நியமித்தார் சசிகலா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டார். நாளடைவில் தினகரனுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தினகரன் அதிமுகவிலிருந்து விலகி, புதிய கட்சியை துவங்கினார். பின்னர் பன்னீர் செல்வம் அதிமுக கட்சியில் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் நான்கு ஆண்டு கால சிறைவாசம் முடித்து கடந்த மாதம் தமிழகம் திரும்பினார் சசிகலா. சசிகலாவின் வருகையால் தமிழகத்தில் அரசியல் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என பலர் கணித்து வந்தனர்.

#INDvsENG 4 வது டெஸ்ட் – அக்சர் சுழலில் வீழ்ந்த சிப்லே!விக்கெட்டை இழந்து திணறும் இங்கிலாந்து!!

தமிழகம் திரும்பியதும், சசிகலா எதிர்பார்த்தபடி அதிமுக அமைச்சர்கள் ஒருவர் கூட அவரை சந்திக்க வரவில்லை. அதற்கான காரணத்தை விளங்கி கொள்ள முற்படுகையில், சசிகலா மற்றும் தினகரனுக்கு இடையே குழப்பங்கள் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சசிகலா அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘என் அக்கா ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு இணங்க, கட்சியின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

என் மீது அன்பும், அக்கறையும் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் அரசியலை விட்டு விலகுகிறேன். அதிமுகவின் பொற்கால ஆட்சி தமிழகத்தின் நீடித்திருக்க, இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்’ என கூறியுள்ளார். இது குறித்து தினகரன் கூறுகையில், ‘தொண்டர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தான் சசிகலா விரும்பினார். அதனால் தான் அரசியலை விட்டு விலகப்போவதாக சசிகலா அறிவித்துள்ளார். சசிகலா எடுத்த முடிவால் சோர்வடைந்து விட்டேன்’ என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here