80ஸ் ஹீரோஸ் ரேஞ்சுக்கு மாறிய ஆர்யா – வைரலாகும் ‘சார்பட்டா பரம்பரை’!!

0

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் “சார்பட்டா பரம்பரை” இந்த திரைப்படத்தில் பங்குபெற இருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த விடீயோவினை தற்போது இணையத்தளத்தில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர்.

பா ரஞ்சித் திரைப்படம்

தமிழ் திரையுலகில் தனக்கு என்று ஒரு வித்தியாசமான கதைக்களத்தினை கொண்டு திரைப்படங்களை இயக்கி வருபவர் தான், இயக்குனர் பா. ரஞ்சித். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடிகர் கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” திரைப்படத்தினை இயக்கினார். வடசென்னையில் வசித்து வரும் மக்கள் எது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என்று அழகாக படம் பிடித்து காட்டியிருப்பர். இதனால் அவரது படங்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க இவர் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து “கபாலி” “காலா” என்ற திரைப்படங்களை இயக்கினார். மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூறியதால் இவரது படங்கள் ஆழ்ந்த கருத்துக்களை கொண்ட திரைப்படங்களாக பார்க்கப்பட்டது. இப்படியான சூழலில் நடிகர் ஆர்யாவினை வைத்து “சார்பட்டா பரம்பரை” என்ற திரைப்படத்தினை தற்போது இயக்கி வருகிறார்.

யூடியூப் வீடியோ

இந்த படம் வடசென்னையில் வசிக்கும் பாக்ஸர்களின் பிரச்சனைகளை எடுத்து கூறுகிறது. அவர்களது வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

குட்டி பனியனுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர்களின் கதாபாத்திரம் குறித்த ஒரு விடீயோவினை யூடியூப் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இருந்தே நடிகர்கள் அனைவரும் கடுமையாக இந்த படத்திற்காக உழைத்துள்ளனர் என்று தெரிகிறது. குறிப்பாக, நடிகர் ஆர்யா இந்த திரைப்படத்திற்காக தனது உடல் எடையினையும் தோற்றத்தினையும் டோட்டலாக மாற்றியுள்ளார்.

                                  முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here