சூர்யா வெளியிட்ட சார்பட்டா பரம்பரை பட ட்ரைலர் – படம் ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது!!!

0
சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா - படம் ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது!!!
சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா - படம் ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளது!!!

ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லரை பிரபல நடிகர் தனது ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் வெளியானது…

நடிகர் ஆர்யா கடந்த 2005 ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் மதராசபட்டினம், ராஜா ராணி போன்ற வெற்றி படங்களையும் கொடுத்தார். தல அஜித்துடன் ஆரம்பம் படத்திலும் நடித்தார். இவர் ஒரு தயாரிப்பாளரும் ஆவார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் சற்று குறைந்தன. இடையில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் நிகழ்ச்சியில் தனக்கு மணப்பெண் தேடும் பணியில் இறங்கினார். இன்னியில் சினிமா நடிகையான சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரபல இயக்குனரும் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா பரியேறும் பெருமாள், போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்தார்.

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் வெளியானது...
சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் வெளியானது…

தற்போது பா.ரஞ்சித் இயக்கியுள்ள சார்பட்டா பரம்பரை என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆர்யாக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இவர்களுடன் பசுபதி, ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் துணை நடிகர்களும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை இயக்குனர் ரஞ்சித் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த படத்தின் ட்ரெய்லரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 13 ஆன இன்று பிற்பகல் 12 மணியளவில் வெளியிட்டார்.

சார்பட்டா பரம்பரை அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது…

இந்த படம் 1970ல் வடசென்னை பகுதியில் இருந்த குத்து சண்டை வீரர்கள் மற்றும் குடுவினர்களை மையப்படுத்திய கதையாகும். படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு இறுதியிலே முடிந்துவிட்டது.

சார்பட்டா பரம்பரை அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது...
சார்பட்டா பரம்பரை அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது…

இப்பொழுது கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடியிருப்பதால் படத்தை வெளியிட முடியாது என்பதால் வரும் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் மூலம் வெளியிடப்போவதாக பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here