அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி…, சர்பராஸ் கானின் சிறு வயது நினைவை பகிர்ந்த தந்தை!!

0
அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி..., சர்பராஸ் கானின் சிறு வயது நினைவை பகிர்ந்த தந்தை!!
அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி..., சர்பராஸ் கானின் சிறு வயது நினைவை பகிர்ந்த தந்தை!!

சர்வதேச அணியில் இடம் பிடிக்க காத்துக் கொண்டிருக்கும், சர்பராஸ் கானின் சிறு வயது நினைவுகளை, இவரது தந்தை பகிர்ந்துள்ளார்.

சர்பராஸ் கான்:

ரஞ்சி டிராபியில், பல இளம் வீரர்கள் தொடர்ந்து சதங்களை அடித்து, தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த இளம் வீரர்கள், சிறப்பாக விளையாடினாலும், சர்வதேச இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக போராடியே வருகின்றன. சர்வதேச அணியில், இடம் பிடிக்க பல இளம் வீரர்கள் போட்டியிட்டாலும், 11 வீரர்கள் தான் விளையாடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், ரஞ்சி டிராபியில் இளம் வீரர்கள் தொடர்ந்து, தங்களது திறமையை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த வகையில், சர்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் தொடர்ந்து தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச அணியில் இடம் பெற காத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், இவரது தந்தை, நவ்ஷாத் சர்பராஸ் கானின் சிறு வயது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

உம்ரான் மாலிக் இதை செய்தால் கரெக்ட்டா இருக்கும்.., நியூசிலாந்தை திணறடித்த முகமது ஷமி ஓபன் டாக்!!!

அவர் கூறியதாவது, சச்சின் மகன் அர்ஜுன் தான் பைக், மொபைல் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்துள்ளான். எனவே, அர்ஜுன் தான் ரொம்ப லக்கி என்று சர்பராஸ் கான் சிறு வயதில் கூறியிருந்தார். ஆனால், சிறிது காலத்தில், சச்சினால் தனது மகனுடன் இணைந்து பல நேரம் இணைந்து இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. என் தந்தை என்னுடன் தான் எப்போதும் இருக்கிறார் என்று தன்னை கட்டியணைத்து, நான் தான் ரொம்ப லக்கி என கூறியதாக சர்பராஸ் கான் தந்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here