
கோலிவுட்டில் படு பிசியாக இருந்து வரும் நடிகர் தான் தனுஷ். அடுத்தடுத்த படங்களில் நிற்க கூட நேரமில்லாமல் பம்பரமாக திரையுலகில் சுற்றி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் உருவாகி வருகிறது. மேலும் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் – ராதிகா தம்பதிகள் புதிதாக கட்டிய வீட்டில் இன்று புதுமனை புகுவிழா நடைபெற்றுள்ளது. இதில் பல நட்சத்திரங்கள் கலந்துள்ளனர். இந்த விழாவில் படு பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷும் பங்கேற்று விழாவை சிறப்பித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.