விஜய் படத்தில் தங்கையாக நடித்த இந்த நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா?? – அவரே வெளியிட்ட பதிவு!!!

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்களுக்கு தெரிய வந்தவர் சரண்யா மோகன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய மகன் அனந்த பத்மநாபன் உடன் உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.அதாவது 1997 ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை என்ற விஜய் அவர்களின் படத்தில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதே போல் மலையாளத்தில் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு ஒரு நாள் ஒரு கனவு தமிழ் படத்தில் ஒரு பருவ பெண்ணாக  அறிமுகமானார். இதையடுத்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் இவர்  தங்கை, தோழி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதாவது யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான், வேலாயுதம்,ஈரம் உள்ளிட்ட படங்களில் தங்கையாகவும் பஞ்சாமிர்தம், அ ஆ இ ஈ, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கடந்த 2015ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு 2016 ஆம் ஆண்டு அனந்த பத்மநாபன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர்  2019ஆம் ஆண்டு அன்னபூர்ணா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் தற்போது இவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த  புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here