இந்திய அணியில் தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்…, சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவுகள்!!

0
இந்திய அணியில் தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..., சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவுகள்!!
இந்திய அணியில் தொடர்ந்து மறுக்கப்படும் வாய்ப்புகள்..., சஞ்சு சாம்சனுக்கு பெருகும் ஆதரவுகள்!!

இந்திய அணியானது சமீபத்தில் 8 வது முறையாக ஆசிய கோப்பையை வென்று அசத்தியது. இதன் தொடர்ச்சியாக வரும் செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 27 ஆம் தேதி வரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணிகளை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இந்த அணியிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆசிய கோப்பை தொடரிலும், இவர் ஸ்டாண்ட் அப் பிளேயராகவே திகழ்ந்தார். உலக கோப்பையிலும் இவரை பிசிசிஐ இணைக்கவில்லை. ஆனால், இளம் வீரரான திலக் வர்மாவுக்கு கூட அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டே வருகிறது. இது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் “இப்போது சஞ்சு சாம்சன் இடத்தில் நான் இருந்தால், நான் மிகவும் ஏமாற்றமடைவேன்” என்று கூறியுள்ளார்.

வரலாற்றில் இன்று: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் விளாசிய யுவராஜ் சிங்…, அதிவேக அரைசதம் அடித்த மான்ஸ்டர்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here