சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் மறுக்கப்பட்டதுக்கு இது தான் காரணம்…, ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

0
சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் மறுக்கப்பட்டதுக்கு இது தான் காரணம்..., ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!
சஞ்சு சாம்சன், உம்ரன் மாலிக் மறுக்கப்பட்டதுக்கு இது தான் காரணம்..., ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரன் மாலிக்-கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்காததத்துக்கு இது தான் காரணம் என ஹர்திக் பாண்டிய கூறியுள்ளார்.

இந்திய அணி:

இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல தவறினாலும், அணிகளுக்கு இடையிலான தொடர்களை பல கேப்டன்களின் தலைமையில் கைப்பற்றி வருகிறது. இந்த வகையில் தான், நேற்றுடன் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி வென்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்திய அணி வென்றாலும், பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு, இடம் கொடுக்காதது குறித்து, பிசிசிஐ மற்றும் ஹர்திக் பாண்டியா பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளன. இந்நிலையில், ஹர்திக் பாண்டியா, இந்த விமர்சனங்கள் எல்லாம் அணியை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறி, பயிற்சியாளருடன் கலந்து பேசி தான் பிளேயிங் லெவனை முடிவு செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா படைத்த புதிய சாதனை…, முதல் கேப்டனே இவர் தானா?? அப்போ தோனி, கோஹ்லிலாம்??

மேலும், நேற்று இந்திய அணியை பொறுத்த வரையில், பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் அதிக தேவைப்பட்டதாக இருந்தது. அதனால் தான், ஆல்ரவுண்டரான தீபக் ஹூடாவை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, இந்த தொடரானது மிக குறுகிய வடிவிலானது. எனவே, வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதும் குறைவாகவே இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here