சஞ்சீவ் நடிக்கும் கயல் சீரியலில் கமிட்டான ஜீ தமிழ் நடிகை – யாருனு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் வெளியான ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சஞ்சீவ் தற்போது சன் டிவியில் கயல் என்ற சீரியலில் நடிக்கவுள்ள நிலையில் அதில் நடிக்க இருக்கும் நாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

கயல்

சன் டிவியில் புதிதாக கயல் என்ற புது சீரியல் களமிறங்கவுள்ளது. இதில் விஜய் டிவி பிரபலமான சஞ்சீவ் நடித்து நடிக்க கமிட்டாகியுள்ளார். சஞ்சீவ் எப்பொழுது சீரியல் நடிப்பார் என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர்.

சில நாட்களுக்கு முன்பாக தான் சஞ்சீவ் தான் நடிக்க இருக்கும் கயல் பற்றிய தகவலை வெளியிட்டார். அதுவும் இந்த சீரியல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் அந்த சீரியலில் நடிக்க இருக்கும் நாயகி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜீ தமிழில் வெளியான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி இதில் நடிக்கவுள்ளார். யாரடி மோகினி சீரியல் முடிவடைய இருக்கும் நிலையில் சன் டிவியில் கால் பதித்துள்ளார்.

விஜய் டிவியும், ஜீ தமிழும் இணைந்து சன் டிவியில் பணி புரிய இருப்பதால் பலரும் இந்த சீரியலுக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here