பிக் பாஸ் பிரபலத்தின் வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு விழா…!நிகழ்ச்சியின் புகைப்படங்கள் உள்ளே!!!

0

சினிமா துறையில் ஒரு பிரபல நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர் அவர்கள். அவரின் மனைவி தற்போது இரண்டாவது தடவையாக கர்ப்பம் தரித்து உள்ளார். இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்று உள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட மொழி படங்களுக்கு நடன ஆசிரியராக இருப்பவர் சாண்டி மாஸ்டர் அவர்கள். இவர் முதன் முதலாக கலைஞர் டிவி மூலம் திரை உலகிற்கு வந்தார். அதன் பிறகு தன்னுடைய நடன திறமையால் வெள்ளித் திரையில் ஒரு நடன இயக்குனராக ஜொலிக்கிறார். மேலும் இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து கொண்டவர். இந்நிலையில் இவரின் சொந்த வாழ்க்கையை பொறுத்தவரை முதலில் காஜல் பசுபதி என்பவரை காதலித்து மணந்தார். ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு நீடிக்கவில்லை. ஒரு சில கருத்து  வேறுபாடுகள் காரணமாக பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சில்வியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு லாலா என்ற ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில்  சில்வியா மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பம்  அடைந்து  உள்ளதாக சாண்டி அறிவித்து இருந்தார். இதையடுத்து அவருக்கு வீட்டிலேயே வைத்து மிக எளிய முறையில், மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைக்கப்பட்டு வளைகாப்பு விழா நடந்துள்ளது. அதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here