‘பிக் பாஸ்’ சாண்டி மாஸ்டருக்கு கிடைத்த அங்கீகாரம் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமடைந்த நடன இயக்குனர் சாண்டியின் வீட்டில் தற்போது ஒரு விசேஷம் நடந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடன இயக்குனர் சாண்டி

தமிழ் சினிமாவில் இன்று வரை முக்கியமாக பார்க்கப்படுவது இசை மற்றும் நடனம் தான். இதனை ரசிப்பதற்கு என்று தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தனது தேர்ந்த நடனத்தின் மூலமாக தனக்கு என்று ஒரு தனி முத்திரையை பதித்து கொண்டவர் தான், சாண்டி.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தான் தமிழ் சினிமாவில் ஒரு நடன இயக்குனராக எண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் முதன் முதலாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” நிகழ்ச்சியில் நடன இயக்குனராக இருந்துள்ளார்.

வெண்பா தொலைந்ததற்கு சௌந்தர்யா மீது சந்தேகப்படும் பாரதி – அடிதடியில் முடிந்த பாரதி கண்ணம்மா எபிசோட்!!

பின், பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு இவர் நடன இயக்குனராக இருந்து வருகிறார். அதே போல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த நிகழ்ச்சியில் இவருக்கும் நடிகர் கவினுக்கு இருந்த நட்பினை பார்த்து அனைவரும் வியந்து தான் போயினர். இவர் அந்த நிகழ்ச்சியின் இரண்டாவது பரிசினை தட்டி சென்றார். இப்படியாக இருக்க, இவரது மனைவி சில்வியா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை அவரே உறுதி செய்துள்ளார்.

கொரோனா பொது முடக்க காலம் என்பதால் மிகவும் எளிமையாக வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அனைவரும் இருவருக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here