சாண்டி மாஸ்டர் பொண்ணு லாலா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தனர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. மேலும் குழந்தையாக இருந்த அவரது மகள் லாலாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சாண்டி

டான்ஸ் மாஸ்டராக திரையுலகிற்கு அறிமுகமானவர் சாண்டி. பல கஷ்டங்களுக்கு பிறகு திரையுலகில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமை முழுவதையும் காட்டி மக்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்றார். பொறுமையாகவும் அதே நேரத்தில் காமெடியாகவும் மக்கள் மனதை கொள்ளையடித்தனர் சாண்டி.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவரது அந்த துறுதுறுவென இருக்கும் ஆக்சனும், அனைவரையும் சரமாரியாக கலாய்ப்பதும் தான் ஹைலைட். சாண்டி, லாஸ்லியா, தர்ஷன், கவின் என ஒரு கேங் ஆரம்பமானது. பலரும் சில சமயங்களில் திட்டினாலும், சில விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தது. இந்நிலையில் சாண்டி கவினின் நட்பு தான் கடைசி வரை நிலைத்து இருந்தது. வெளியே வந்த சாண்டிக்கு பல வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. எங்கு பார்த்தாலும் சாண்டி மாஸ்டரின் டான்ஸ் தான்.

இப்பொழுது கூட அஸ்வின் நடிப்பில் வெளியான குட்டி பட்டாசு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பரவியது. மேலும் 70 வது நாள் லாலா வந்த எபிசோடு தான் மாஸ். 100 நாட்கள் தனது மகளை பிரிந்து இருந்த சாண்டி கதறியது இன்னும் அனைவரின் மனதுக்குள்ளும் இருக்கிறது.

குழந்தையாக நாம் அனைவரும் பார்த்த லாலா தற்போது வளர்ந்தும் விட்டார். சமூக வலைத்தளங்களில் சில நாட்களாகவே லாலா புகைப்படங்களே வைரலானது. தற்போது குழந்தையில் இருந்து சற்று வளர்ந்திருக்கும் லாலாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே கியூட் புன்னைகையுடன் இருக்கும் லாலாவின் புகைப்படத்தை பார்த்த பலரும் வியந்து போய் தான் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here