பிக் பாஸ் சாண்டிக்கு பிறந்த குட்டி சாண்டி – குவியும் வாழ்த்துக்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சாண்டி மாஸ்டருக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சாண்டி

நடன இயக்குனரான சாண்டி ஆரம்பத்தில் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். மேலும் நீண்ட உழைப்பிற்கு பிறகு திரையுலகில் டான்ஸ் மாஸ்டரராக அடியெடுத்து வைத்தார். அதன் பின்பு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

தனது சுறுசுறுப்பாலும், காமெடியாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.  இவரும் கவினும் இணைந்து பிக் பாஸ் வீட்டில் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. ஆனால் இது அனைவராலும் ரசிக்கும்படியாக தான் இருந்தது.

70வது நாளில் அவரது மகள் லாலா வீட்டிற்கு வர அந்த சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்தது.  சாண்டி தன் மகளுக்காக அழுதது உருக்கியது. லாலா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் படு பேமஸ் ஆனார். இந்நிலையில் தற்போது தான் சாண்டியின் மனைவி கர்ப்பமாக இருந்ததை அடுத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here