வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு., ஏப்ரல் 1 முதல் அமல்! மீறினால் அபராதம் கன்பார்ம்!!

0
வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு., ஏப்ரல் 1 முதல் அமல்! மீறினால் அபராதம் கன்பார்ம்!!
வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு., ஏப்ரல் 1 முதல் அமல்! மீறினால் அபராதம் கன்பார்ம்!!

மாநிலம் முழுவதும் உள்ள பொது சேவை உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களில் சைரன் சேவையுடன் கூடிய ஜிபிஎஸ் சாதனத்தை பொருத்துமாறு சண்டிகர் அரசு அறிவித்துள்ளது.

அரசு உத்தரவு:

மாநிலம் முழுவதும், பொது சேவை வாகனங்களுக்கு முக்கிய உத்தரவை சண்டிகர் அரசு பிறப்பித்துள்ளது. அதாவது மாநிலத்தில் உள்ள 5500 பொது சேவை வாகனங்களில், அரசு குறிப்பிட்டதை போல மோட்டார் வண்டிகள், பேருந்துகள் மற்றும் பொது சேவை உள்ளிட்ட 2100 வாகனங்களில் மட்டும் சைரன் உள்ளிட்ட அம்சத்துடன் கூடிய ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி, இது சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில போக்குவரத்து ஆணை வெளியிட்டிருந்தது. இது குறித்து பேசிய சண்டிகர் நிர்வாகம் முதன்மை செயலாளர், வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட அனைத்து பொது சேவை வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளார்.

தமிழக டிப்ளமோ பயிற்சி ஆசிரியர்கள் கவனத்திற்கு., தேர்வு அட்டவணை வெளியீடு! விவரம் உள்ளே!!

இந்த உத்தரவை மீறும் வாகனங்களுக்கு வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பொது சேவை வாகன விதி 125 இன் கீழ் மேற்கொள்ளப்படுவதாக வும், இவற்றை அனைத்து வாகன ஓட்டிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here