அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்து இருந்தார். இது இந்து அமைப்பினர் உள்ளிட்ட பலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து திருவாரூர் அரசு கல்லூரியில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளுக்கான நிகழ்ச்சியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்க சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை பதிவு செய்த நீதிபதிகள் கூறுகையில், “சனாதன தர்மம் என்பது இந்துக்களின் நித்திய கடமை, பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமை, தேசத்துக்கான கடமை உள்ளிட்டவைகளின் தொகுப்பாகும். தற்போது சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. இதனால் தீண்டாமையை ஒழிக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவியரை ஊக்குவிக்கலாம். தவிர கருத்து சுதந்திரம் என்பதற்காக, மற்றொருவரை காயப்படுத்தக்கூடாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.