காதல் சடுகுடுவில் ரசிகர்களை ஆஃப் செய்த பிக் பாஸ் சம்யுக்தா – வைரலாகும் வீடியோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சம்யுக்தா தற்போது ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சம்யுக்தா

மாடலிங் துறையில் இருந்த சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ஆரம்பத்தில் நல்ல பெயர் எடுத்தாலும் நாளடைவில் அவரது செய்கையால் முகம் சுளிக்க வைத்தார். இவருக்கும் பாலாஜிக்கு இடையே நல்ல ஒரு நட்பு இருந்தது.

இதனால் அவர் ஒரு பக்கம் மட்டுமே சாதகமாக பேசி வருகிறார் என்று சொல்ல அவர் மீது குற்றசாட்டுகள் எழுந்தது. இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி முட்டிக்கொண்டது. இது பாலாஜிக்காக தான் செய்கிறார் என்றும் பல கூறி வந்தனர்.

சனத்துடன் மட்டுமல்லாமல் ஆரி உடனும் பல சண்டைகள் ஏற்பட்டது. ஷிவானி, ஆஜித் பலரும் சம்யுக்தாவை ஒரு அம்மாவாக தான் பார்த்து வந்தனர். இவருக்கு திருமணம் ஆன நிலையில் கணவருடன் விவாகரத்து பெற்று தன் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

மேலும் சம்யுக்தா தனி ஆளாக தனது பிஸ்னஸை நடத்தி வருகிறார். மாடலிங் துறையில் இருந்த இவர் மலையாள படத்திலும் நடித்திருக்கிறார். தற்போதெல்லாம் ரீல்ஸ் போட்டோஷூட் என அசத்தி வருகிறார். மேலும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிலும் தனது டான்ஸ் திறமையிலும் கலக்கி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் விடியோவை மிஸ் பண்ணாம பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here