லேடி சூப்பர் ஸ்டாரை ஓரங்கட்டி சோதனையில் சாதனை படைத்த சமந்தா – குவியும் பாராட்டுக்கள்!!

0
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் வெற்றியாளர்களின் பெயர்கள் இன்று (20, ஆகஸ்ட் 2021) அறிவிக்கப்பட்டது. அதில் தமிழ் படமான சூரரை போற்று இரு விருதுகளை வென்றது. அது போல ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் நடித்ததற்கு சமந்தாவிற்கு சிறந்த நடிகைகான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஜானு’வைத் தொடர்ந்து சமந்தா அளித்த மற்றுமொரு சிறந்த பர்ஃபாமன்ஸ் படம் என்றால் அது  ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸ். அதில் சமந்தா ராஜலட்சுமி என்கிற ராஜியாக நடித்து இருந்தார். இந்த கதாபாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி தன் கண்களில் பயமோ, வருத்தமோ துளியும் தெரியாமல் சமந்தா வெளியப்படுத்திய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் முதல் பாகத்தைப் போலவே , இரண்டாம் பாகத்திலும் ஏகப்பட்ட சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்தன. இந்த சீரிஸின் ட்ரெய்லரிலேயே தமிழக அரசு தடை கேட்கும் அளவுக்கு பிரச்சனைகள் எழுந்தன. பின்னர் படக்குழு விளக்கம் அளித்ததன் பின் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

தற்போது மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிர்காக சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் சமந்தாவிற்கு இந்திய அளவில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here