தன் நெருங்கிய தோழியுடன் உற்சாகமாக பொழுதை கழிக்கும் சமந்தா…!லைக்ஸ்களை அள்ளும் புகைப்படங்கள்!!!

0

சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தன் தோழியுடன் ஜாலியாக வெவ்வேறு இடங்களில் தன்னுடைய பொழுதை கழிக்கிறார்.

ஒரு துணை நடிகையாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் தென்னிந்திய சினிமா உலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் திரைத்துறையில் மார்க்கெட் இருக்கும் போதே தெலுங்கில் ஒரு முன்னணி நடிகராக இருக்கும் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று நினைத்த வேளையில் சமந்தா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதாவது திருமணத்திற்கு பிறகு மேலும் படு கவர்ச்சியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தூள் கிளப்பி வருகிறார். இவ்வாறு நடிப்பில் மிக பிசியாக இருந்து வரும் இவர் தற்போது  சாகுந்தலம் என்ற தெலுங்கு படமும், தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இந்த இரு படங்களும் முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில் சமீபகாலமாக இவரும் இவரின் காதல் கணவருமான நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக செய்திகள் வதந்திகளாக வந்த வண்ணம் இருக்கிறது. இது பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் இதற்கு எந்த வித பதிலும் சொல்லாமல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் தன்னுடைய ஓய்வு பொழுதை சுற்றுலா தலங்களுக்கு சென்று தன் தோழி மற்றும் குடும்பத்துடன் குதூகலமாக கழித்து வருகிறார். மேலும் அங்கு எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தன் தோழியுடன் படகில்  பயணம் செய்வது, வித விதமாக இடங்களின் அழகை ரசிப்பது போன்று உள்ள பல புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது  இணையத்தை கலக்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here